Advertisement

இன்று தங்கம் விலை சரிவு

By: vaithegi Tue, 21 Mar 2023 12:27:40 PM

இன்று தங்கம் விலை சரிவு

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 குறைந்து, ரூ.44,560 -க்கு விற்பனை ...

கடந்த 1 வாரமாக தங்கம் விலை அதிரடியாக அதிகரித்து வந்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது. கடந்த 1 வாரத்தில் மட்டும் ரூ.3,000 ரூபாய் வரை அதிகரித்ததால் நகைப் பிரியர்கள் பலரும் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து இன்று சற்று தங்கம் விலை குறைந்துள்ளது.

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

gold,jewelry lovers ,தங்கம், நகைப் பிரியர்கள்

இந்தநிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,570-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.44,560-க்கு விற்பனையாகிறது.

24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.48,616 க்கு விற்பனையாகிறது. கிராம் ஒன்றுக்கு ரூ.10 குறைந்து ரூ. 6,067-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோன்று, ஒரு கிராம் வெள்ளி ரூ.74.70-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை இன்று ரூ.74,700-ஆக இருக்கிறது.

Tags :
|