Advertisement

தொடர்ந்து 3 வது நாளாக சரிவை சந்தித்து வரும் தங்கம் விலை

By: vaithegi Fri, 19 May 2023 1:56:53 PM

தொடர்ந்து 3 வது நாளாக சரிவை சந்தித்து வரும் தங்கம் விலை

சென்னை: இன்றைய காலை நேர நிலவரப்படி ரூ. 200 குறைந்துள்ளது. நேற்றைய விலையை விட தங்கம் இன்று குறைந்து விற்பனையாவதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி .... கடந்த மார்ச் மாதம் முதலே தங்கம் விலை ஏறுமுகத்திலேயே இருந்து கொண்டு வருகிறது.

இதையடுத்து அவ்வப்போது பெயரளவுக்கு ஓரிரு நாட்கள் குறைந்தாலும், கனிசமாக விலை உயர்ந்து வருகிறது என்பதே நிதர்சனம். கடந்த ஆண்டு நவம்பர் , டிசம்பர் மாதங்களில் ரூ. 39,000 முதல் ரூ. 40,000 வரை விற்பனையான தங்கம் விலை, கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து அண்மையில் ஒரு சவரன் ரூ.46,000 தொட்டது.

இதுவே தங்கம் விலை வரலாற்றில் அதிகபட்ச விலையாக இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக தங்கம் சற்று விலை குறைந்து வருகிறது. தங்கத்தின் விலையில் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கம் இருந்து வரும் நிலையில், நேற்று முன் தினம் 360 ரூபாயும், நேற்று 160 ரூபாயும் குறைந்திருந்தது.

gold price,sawaran ,தங்கம் விலை ,சவரன்

இந்நிலையில் இன்று 3வது நாளாக ஆபரணத் தங்கம் விலை மேலும் 200 ரூபாய் அதிரடியாக குறைந்துள்ளது. அதாவது சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 5,620 ரூபாய்க்கும் , 1 சவரன் ரூ.45,200க்கும் விற்பனையானது.

இந்நிலையில் இன்றும் சவரனுக்கு ரூ. 200 குறைந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ. 45,000க்கும், ஒரு கிராம் ரூ.5,625க்கும் விற்பனையாகிறது. இதேபோன்று சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு 10 காசுகள் குறைந்து 1 கிராம் ரூ.78க்கு விற்பனையாகிறது. 1 கிலோ வெள்ளிரூ. 78,000க்கு விற்கப்படுகிறது.

Tags :