Advertisement

தொடர்ந்து ஏறும் தங்கம் விலை

By: vaithegi Sat, 21 Oct 2023 11:27:36 AM

தொடர்ந்து  ஏறும் தங்கம் விலை


சென்னை: இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 அதிகரித்து 1 சவரன் தங்கம் ரூ.45,360-க்கு விற்பனை ...சென்னையில் கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று முன் தினம் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 360 ரூபாய் அதிகரித்தது.

இதேபோன்று நேற்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை அதிரடியாக சவரனுக்கு 600 ரூபாய் அதிகரித்து 1 சவரன் தங்கம் 45 ஆயிரத்து 250 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ஆபரண தங்கம் 75 ரூபாய் அதிகரித்து , 5,660 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் வெள்ளி ஒரு கிராம் ரூ.77.50 ஆகவும், 1 கிலோ வெள்ளி ரூ.77,500 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.

gold,sale ,தங்கம் ,விற்பனை

இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 அதிகரித்து 1 சவரன் தங்கம் ரூ.45,360-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதேபோன்று ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 10 ரூபாய் அதிகரித்து ரூ.5,670-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தை போல் வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.20 அதிகரித்து ரூ.78.70-க்கும், கிலோவுக்கு 1200 ரூபாய் உயர்ந்து 78 ஆயிரத்து 700 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tags :
|