Advertisement

தொடர்ந்து சரியும் தங்கத்தின் விலை

By: vaithegi Fri, 03 Mar 2023 12:40:12 PM

தொடர்ந்து சரியும் தங்கத்தின் விலை

சென்னை: இந்தியாவில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்வுகளுக்கு மக்கள் தங்க அணிகலன்கள் வாங்குவது வழக்கம். அதே போன்று பண்டிகை காலங்களிலும் தங்கத்தின் விற்பனை அதிக அளவு இருக்கும். நம் நாட்டை பொறுத்தவரை தங்கம் என்பது ஒரு வகையான சமூக அந்தஸ்தாகவும், கலாச்சார வழக்கமாக இருந்து கொண்டு வருகிறது.

இத்தகைய நேரத்தில் தங்கத்தின் விலை கடந்த வருடங்களில் விண்ணை முட்டும் அளவு அதிகரித்து வந்தது. இந்த விலை உயர்வுக்கு பங்கு சந்தை சரிவு, உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் கூறப்பட்டது.

sale of gold,jewellery ,தங்கத்தின் விற்பனை,அணிகலன்கள்


தொடர்ந்து ஏறி வந்த தங்கத்தின் விலையானது கடந்த மாதத்தின் இறுதியில் இருந்து சற்று சரிந்து கொண்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய காலை நேர நிலவரப்படி ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 24 குறைந்துள்ளது.

இதனையடுத்து ஒரு சவரன் தங்கம் ரூ.41,920 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஒரு கிராம் ரூ.3 குறைந்து ரூ.5,240 க்கு விற்பனையாகிறது. இன்று வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.70க்கும் ஒரு கிலோ ரூ.70,000க்கும் விற்பனையாகி கொண்டு வருகிறது.

Tags :