Advertisement

தொடர்ந்து உயரும் தங்கம் விலை

By: vaithegi Fri, 13 Jan 2023 1:47:45 PM

தொடர்ந்து உயரும் தங்கம் விலை

சென்னை: உலக நாடுகள் மத்தியில் குறிப்பாக இந்தியாவில் எப்போதுமே தங்கத்தின் நுகர்வு சற்று அதிகமாகத்தான் இருக்கும். அதற்கு ஏற்றார் போல், தங்கத்தின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அதிலும் குறிப்பாக கடந்த டிசம்பர் மாத இறுதியில் சற்று குறைந்த தங்கம் விலை, புத்தாண்டின் தொடக்கம் முதலே தொடர்ந்து ஏறுமுகமாகவே சென்று வருகிறது.நேற்று ஒரு சவரன் ஆபரணதங்கம் ரூ. 41,888 ஆக விற்பனை செய்யப்பட்டது. மேலும் ஒரு கிராம் தங்கம் நேற்று ரூ.5236க்கு விற்பனை செய்யப்பட்டது.

chennai,gold ,தங்கம் ,சென்னை

இதனை அடுத்து இந்நிலையில் இன்று ஒரு சவரன் அபரணதங்கத்தின் விலை ரூ.112 அதிகரித்து ரூ.42,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே சமயம் ஒரு கிராம் தங்கம் ரூ.14 அதிகரித்து ரூ.5250 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.5725க்கு விற்பனை ஆகிறது. ஒரு சவரன் தூய தங்கம் ரூ.45,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை கிராம் 74 ரூபாயாக உள்ளது. கிலோ வெள்ளி 74, 000 ரூபாயாக விற்பனையாகி வருகிறது.

Tags :