Advertisement

தொடர்ந்து உயரும் தங்கம் விலை

By: vaithegi Thu, 30 Mar 2023 11:55:53 AM

தொடர்ந்து உயரும் தங்கம் விலை

சென்னை: தமிழகத்தில் நேற்று வரை தங்கம் விலை குறைந்த நிலையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 அதிகரித்து ரூ.44,520க்கு விற்பனை ... தமிழகத்தில் தங்கம் விலையானது நிலையாக இல்லாமல் ஏற்ற தாழ்வுடன் இருக்கிறது.

அந்த வகையில் தங்கம் விலை சென்ற வாரம் சற்று குறைந்தது. அதனால் நகை பிரியர்கள் பெரும் மகிழ்ச்சியில் இருந்தனர். ஆனால் இன்று (மார்ச் 30) தங்கம் விலை கணிசமாக அதிகரித்து இருக்கிறது.

gold and jewelry lovers ,தங்கம் ,நகை பிரியர்கள்

எனவே அதன் படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 160 அதிகரித்து ரூ. 44,520க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ரூ. 5,565க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி 20 காசுகள் அதிகரித்து ரூ.76.20க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோ ரூ. 76,200க்கு விற்பனையாகிறது.தங்கம் விலையானது எவ்வளவு அதிகரித்தாலும் மக்கள் அதை முதலீட்டாக பார்ப்பதால் அதை வாங்குவோர் எண்ணிக்கை குறையாமல் இருப்பது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :