Advertisement

தங்கம் விலையானது தொடர்ந்து உயர்வு

By: vaithegi Thu, 27 July 2023 12:44:45 PM

தங்கம் விலையானது தொடர்ந்து உயர்வு

சென்னை: இன்று (ஜூலை 27) கிராம் ரூ.28 அதிகரித்து ரூ.5580க்கு விற்பனை ...தமிழகத்தில் தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. தங்கத்தை வெறும் செலவாக பார்க்காமல் அதனை மக்கள் முதலீட்டாக பார்க்கின்றனர்.

அந்த வகையில் நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.5552க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று (ஜூலை 27) ரூ. 28 அதிகரித்துள்ளது. எனவே அதன் படி 22 கேரட் ஒரு கிராம் தங்கம் ரூ.5580க்கும் ஒரு சவரன் தங்கம் ரூ.44640க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

gold,sale ,தங்கம் ,விற்பனை

தொடர்ந்து தங்கம் விலை அதிகரிப்பால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.மேலும் அது மட்டுமில்லாமல் 24 கேரட் தூய்மையான தங்கம் ஒரு கிராம் ரூ.6047க்கும், ஒரு சவரன் ரூ.48376 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் வெள்ளி விலையும் அதிகரித்து உள்ளது. அந்த வகையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.81.50க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.81,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Tags :
|