Advertisement

இன்று தங்கம் விலை மீண்டும் குறைந்தது

By: vaithegi Sat, 19 Nov 2022 2:39:34 PM

இன்று தங்கம் விலை மீண்டும் குறைந்தது

சென்னை: தங்கம் என்பது ஒரு ஆடம்பர பொருளாக இல்லாமல் அதை மக்கள் ஒரு முதலீடாக கருதுகின்றனர். அதனால் தான் தங்கம் விலையில் எவ்வளவு வித்தியாசம் இருந்தாலும் மக்கள் அதனை வாங்க தயங்குவதில்லை.

இதையடுத்து இந்த நிலையில் கடந்த மாதம் தங்கம் விலை சரிவை கண்ட நிலையில் அதன் பின் இந்த மாதம் தொடக்கத்தில் தங்கம் விலையானது அதிகரித்தது. கடந்த 2 நாட்களாக தங்கம் விலை குறைந்து கொண்டே வருகிறது. நேற்றைய நிலவரப்படி 22 காரட் தங்கமானது ரூ. 4951க்கு விற்பனை செய்யப்பட்டது.

gold,silver ,தங்கம் ,வெள்ளி

ஆனால் இன்று தங்கம் விலை மீண்டும் ரூ.26 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 4925க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு சவரன் தங்கம் ரூ. 39400க்கு விற்பனை செய்யப்படுகிறது.அதே சமயம் வெள்ளி விலை சற்று உயர்ந்துள்ளது.

அதேபோன்று ஒரு கிராம் வெள்ளி விலையானது ரூ.50 காசுகள் அதிகரித்து ரூ.67.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.500 அதிகரித்து ரூ. 67500க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags :
|