Advertisement

தங்கம் விலை சவரனுக்கு ரூ.216 குறைந்தது!

By: Monisha Mon, 10 Aug 2020 11:30:55 AM

தங்கம் விலை சவரனுக்கு ரூ.216 குறைந்தது!

உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு செய்ய துவங்கியுள்ளனர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது.

அதன் காரணமாக தங்கம் விலையில் கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகிறன்றன. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில் தங்கம் விலை இன்று குறைந்துள்ளது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.216 குறைந்து ரூ.42,864க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.27 குறைந்து ரூ.5,358க்கு விற்பனையாகிறது.

சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 77 காசுகள் குறைந்து ரூ.82.63க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags :
|
|
|