Advertisement

தொடர்ந்து 4-வது நாளாக தங்கம் விலை சரிவு

By: vaithegi Thu, 09 Mar 2023 12:57:45 PM

தொடர்ந்து 4-வது நாளாக தங்கம் விலை சரிவு

சென்னை: இந்தியாவை பொறுத்தவரை தங்கத்தின் நுகர்வு எப்போதும் அதிகமாகவே இருக்கும். குறிப்பாக பெண்கள் தங்க அணிகலன்களை விரும்பி அணிகின்றனர். திருமணம், பண்டிகை உள்ளிட்ட விசேஷ நாட்களில் தங்கத்தின் விற்பனை வழக்கத்தை விட அதிகமாக இருந்து கொண்டு வருகிறது. தற்போது தங்கம் வாங்குவது சிறந்த முதலீடாகவும் பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் மக்களுக்கு ஏற்றது போல தங்கத்தின் விலையானது சற்று சரிந்து வருகிறது. நேற்று எதிர்பார்த்த விதமாக தமிழகத்தில் ஒரு சவரன் ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூ. 560 குறைந்தது. அதன் தொடர்ச்சியாக இன்றும் தங்கத்தின் விலை சரிந்துள்ளது.

gold,jewelry ,தங்கம் ,தங்க அணிகலன்

இன்றைய காலை நேர நிலவரப்படி சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.5,155-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.41,240-க்கு விற்பனையாகிறது.

சென்னையில் வெள்ளியின் விலை ரூ.10 காசுகள் குறைந்து, ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.67.40-க்கு, விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.900 குறைந்து ரூ.67,400-க்கு விற்பனையாகிறது.

Tags :
|