Advertisement

தொடர்ந்து 4வது நாளாக தங்கம் விலை சரிந்துள்ளது

By: vaithegi Thu, 16 Feb 2023 12:35:18 PM

தொடர்ந்து 4வது நாளாக தங்கம் விலை சரிந்துள்ளது

சென்னை: சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப மாற்றியமைக்கப்படும் தங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே அதிரடி ஏற்ற இறக்கங்களை சந்தித்து கொண்டு வருகிறது. அதிலும் அண்மையில் அறிவிக்கப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி, வைர நகைகளுக்கான சுங்க வரியை உயர்த்தியதை அடுத்து, தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டது.

இதையடுத்து இந்த நிலையில் சென்னையில் கடந்த 4 நாட்களாக தங்கம் விலை குறைந்து கொண்டே வருகிறது. நேற்றைய தினம் சவரனுக்கு ரூ. 120 குறைந்து, ஒரு கிராம் ரூ.5,315-க்கும், ஒரு சவரன் ரூ.42,520-க்கு விற்பனையானது.

gold,chennai ,தங்கம் ,சென்னை

இந்நிலையில் இன்றும் தங்கம் விலை சவரனுக்கு மேலும் ரூ. 280 குறைந்திருக்கிறது. அதன்படி சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்து, ஒரு கிராம் ரூ.5,280க்கு விற்கப்படுகிறது. அதேபோன்று சவரனுக்கு ரூ.280 குறைந்து, ஒரு சவரன் ரூ.42,240க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று வெள்ளி விலையும் சற்று சரிவை கண்டிருக்கிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 காசுகள் குறைந்து ரூ.71.80க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ ரூ. 71,800 க்கு விற்பனையாகிறது.

Tags :
|