Advertisement

தொடர்ந்து 4-வது நாளாக இன்றும் தங்கம் விலை குறைந்தது

By: vaithegi Fri, 11 Aug 2023 12:02:36 PM

தொடர்ந்து 4-வது நாளாக இன்றும் தங்கம் விலை குறைந்தது

சென்னை:ஒரே நாளில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 160 அதிரடியாக குறைவு ... சென்னையில் கடந்த செவ்வாய் கிழமை தங்கம் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்தது. நேற்று முன் தினம் சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் 44,240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதையடுத்து நேற்று ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ஒரு சவரன் ரூ.44,040க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.25 குறைந்து ஒரு கிராம் 5,505 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.76.20 ஆக விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிலோ வெள்ளி ரூ.76,200 ஆக விற்பனை செய்யப்பட்டது.

gold price,sale ,தங்கம் விலை,விற்பனை

இந்நிலையில், தொடர்ந்து நான்காவது நாளாக இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து, ஒரு சவரன் ரூ.43,880க்கு விற்பனையாகிறது.

இதேபோன்று சென்னையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.5,485க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையும் இன்று குறைந்து உள்ளது. கடந்த நாட்களுடன் ஒப்பிடும்போது தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது இன்று குறைந்துள்ளதால் நகை வாங்க திட்டமிட்டுள்ள மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags :