Advertisement

தங்கம் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் சரிவு

By: vaithegi Fri, 18 Aug 2023 11:56:53 AM

தங்கம் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் சரிவு

சென்னை: ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.8 குறைந்து ஒரு சவரன் ஆபரண தங்கம் 43,640 ரூபாய்க்கு விற்பனை ..நேற்று முன் தினம் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து 1 சவரன் தங்கம் 43 ஆயிரத்து 960 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது.

கிராமுக்க 5 ரூபாய் குறைந்து 1 கிராம் 5 ஆயிரத்து 495 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. நேற்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.312 குறைந்து ரூ.43,648-க்கு விற்பனை செய்யப்பட்டது.

gold price,sale ,தங்கத்தின் விலை,விற்பனை

இதனை அடுத்து கிராமுக்கு ரூ.39 குறைந்து 1 கிராம் தங்கம் ரூ.5,456-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோன்று வெள்ளி விலையும் குறைந்தது. வெள்ளி விலை கிராமுக்கு 50 பைசா குறைந்து ரூ.75.70 ஆகவும், கிலோவுக்கு 500 ரூபாய் குறைந்து ரூ.75,700 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், தொடர்ந்து 3-வது நாளாக இன்றும் தங்கம் விலை குறைந்து உள்ளது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.8 குறைந்து 1 சவரன் ஆபரண தங்கம் 43,640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோன்று கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து 1 கிராம் தங்கம் ரூ.5,455க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tags :