Advertisement

தங்கம் விலை அதிரடி இன்று சரிவு

By: vaithegi Mon, 10 Apr 2023 11:52:37 AM

தங்கம் விலை அதிரடி இன்று சரிவு

சென்னை: சவரனுக்கு ரூ.320 குறைவு .... எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். அதனால் தான் மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு.

அந்த வகையில் சென்னையில் தங்கம் விலை குறைந்துள்ளது. இதையடுத்து வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி அறிவித்ததன் எதிரொலி காரணமாக தங்கம் விலை இன்று குறைந்துள்ளது.

gold price,collapse ,தங்கம் விலை ,சரிவு

எனவே அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.3,20 குறைந்து ரூ.44,800-க்கு விற்பனை ஆகிறது. கிராமிற்கு ரூ.40 குறைந்து ரூ.5,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 5 நாட்களில் தங்கம் விலை ரூ.720 குறைந்துள்ளது.

மேலும், வெள்ளியின் விலை சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 காசுகள் அதிகரித்து ரூ.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags :