Advertisement

தங்கத்தின் விலை இன்று சரிவு

By: vaithegi Mon, 13 Nov 2023 11:15:00 AM

தங்கத்தின் விலை இன்று சரிவு

சென்னை :தீபாவளி திருநாளை முன்னிட்டு நேற்று தங்க நகைகளின் விற்பனை அமோகமாக நடைபெற்றது.இதையடுத்து நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது சென்னையில் இன்று தங்கத்தின் விலை சற்று குறைந்திருக்கிறது.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. நேற்று முன்தினம் சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.5,600க்கு விற்பனையானது.

gold price,sale ,தங்கத்தின் விலை , விற்பனை


இதனை அடுத்து சவரனுக்கு ரூ. 360 குறைந்து ரூ.44,800க்கு விற்பனையானது.நேற்றும் இதே விலையே நீடித்தது.இந்த நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ. 44,720க்கு விற்பனையாகிறது.

மேலும் ஒரு கிராம் தங்கம் விலையானது ரூ.10 குறைந்து 1 கிராம் ₹5,590க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமுக்கு ₹75.40 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags :