Advertisement

ஒரு வாரத்திற்கும் மேலாகவே தங்கத்தின் விலை குறைந்து வந்த நிலையில், இன்றும் விலை குறைவு

By: vaithegi Tue, 20 June 2023 12:16:26 PM

ஒரு வாரத்திற்கும் மேலாகவே தங்கத்தின் விலை குறைந்து வந்த நிலையில், இன்றும் விலை குறைவு

சென்னை: பங்கு சந்தையில் ஏற்படும் ஏற்றுமதி, இறக்குமதி காரணத்தினால் தங்கத்தின் விலையில் தொடர்ந்து மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து அந்த வகையில் கடந்த 1 வாரத்திற்கும் மேலாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருவதால் நகை பிரியர்கள் நகை வாங்குவதில் ஆர்வம் செலுத்தி கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் நேற்று சென்னையில் 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 6018 ரூபாய்க்கும், சவரனுக்கு 48,144 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

gold price,jewelry ,தங்கத்தின் விலை ,நகை

இதனை அடுத்து நேற்றைய விலையுடன் ஒப்பிடும்போது இன்று தங்கத்தின் விலை மீண்டும் குறைந்து இருக்கிறது. அதாவது, 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து 6008 ரூபாய்க்கும், சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து 48,064 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும், வெள்ளியின் விலை நேற்று கிராமுக்கு 79 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 40 காசுகள் குறைந்து 78.60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து தங்கத்தின் விலை குறைக்க துவங்கியுள்ளதால் நகைப்பிரியர்கள் சற்று மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Tags :