Advertisement

தங்கம் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் ஏற்றம்

By: vaithegi Thu, 24 Aug 2023 2:41:25 PM

தங்கம் விலை கடந்த சில நாட்களாக  குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் ஏற்றம்

சென்னை: இன்று ஒரு கிராம் ரூ.14 அதிகரித்து ரூ. 5480க்கு விற்பனை ..ஆகஸ்ட் மாத தொடக்கத்திலிருந்து தங்கத்தின் விலையானது ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. தமிழகத்தில் தொடர்ந்து நான்காவது நாளாக தங்கம் விலை அதிகரித்துள்ளதால் நகை வாங்க நினைப்பவர்கள் சற்று தயக்கத்தில் இருக்கின்றனர்.

இதையடுத்து நேற்றைய நிலவரப்படி தங்கம் சவரனுக்கு ரூபாய் 48 உயர்ந்தது. இந்நிலையில் இன்று (ஆக.24) தங்கம் விலை ஒரு கிராம் ரூ. 14 அதிகரித்துள்ளது. அந்த வகையில் 22காரட் தங்கம் ஒரு கிராம் ரூ. 5480க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல ஒரு சவரன் ரூ.112 அதிகரித்து ரூ.43840க்கு விற்பனை செய்யப்படுகிறது.

gold price,sale,sawaran , தங்கம் விலை ,விற்பனை  ,சவரன்

அதே போல ஒரு கிராம் 24 காரட் தங்கம் விலை ரூ.5950க்கும், ஒரு சவரன் ரூ.47600க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையும் திடீரென அதிகரித்துள்ளது.

அந்த வகையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.80க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.80000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து தங்கம் விலை உயர்வால் பொதுமக்கள் வருத்தத்தில் இருக்கின்றனர்.

Tags :
|