Advertisement

தங்கம் விலையானது இன்று கணிசமாக குறைந்துள்ளது

By: vaithegi Fri, 14 Oct 2022 2:11:41 PM

தங்கம் விலையானது இன்று கணிசமாக குறைந்துள்ளது

சென்னை: தற்போது டாலரின் மதிப்பு உயர்ந்துள்ளதால் தங்கம் விலையும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போரின் விளைவால் கச்சா எண்ணெய், தங்கம் விலை மிக கடுமையாக உயர்ந்து வருகிறது. மேலும் பங்குச்சந்தையும் சரிந்து கொண்டு வருகிறது.

இதுவும் தங்கத்தின் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இந்நிலையில் மத்திய அரசு தங்கத்திற்கான இறக்குமதி விதியை அதிகரித்தது. இந்த இறக்குமதி விதி அதிகரித்த ஒரு வாரத்தில் மட்டும் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 1000 ரூபாய் வரை உயர்ந்து.

gold price,chennai ,தங்கம் விலை,சென்னை

அடுத்தடுத்து வரும் பண்டிகை காலம் என்பதால் தங்கம் விலையில் ஏற்ற தாழ்வுகள் இருந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி தங்கம் விலை அதிகரித்த நிலையில், இன்று (அக். 14) தங்கம் விலையானது கணிசமாக குறைந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.38,880க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.25 குறைந்து ரூ.4,735க்கு விற்பனை செய்யப்படுகிறது.அதே போல சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 200 காசுகள் குறைந்து ரூ.62.30க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags :