Advertisement

இன்று தங்கத்தின் விலை சரிவை கண்டுள்ளது

By: vaithegi Sat, 21 Jan 2023 11:58:46 AM

இன்று தங்கத்தின் விலை சரிவை கண்டுள்ளது

சென்னை: பண்டிகை நாட்கள், முக்கியமான நாட்களில் தங்கத்தின் விலை புதிய புதிய உச்சத்தை தொட்டது. இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு அதிரடியாக தங்கம் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் குறைந்தது. தங்கத்தின் விலை கடந்த 12ம் தேதி அன்று கிராமுக்கு ரூ. 5,236க்கும், இதே போல் சவரனுக்கு ரூ. 41,888க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதையடுத்து படிப்படியாக தங்கத்தின் விலை உயர்ந்து நேற்று கிராமுக்கு ரூ. 5,325க்கும் மற்றும் சவரனுக்கு ரூ.42,600க்கும் விற்பனையானது. இந்நிலையில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவை கண்டுள்ளது.

price of gold,silver , தங்கத்தின் விலை,  வெள்ளி

எனவே அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 5 குறைந்து ரூ.ரூ. 5,320க்கு விற்பனையாகிறது. இதே போல் சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.42,560க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் இதே போன்று வெள்ளியின் விலையும் கிராமுக்கு 20 காசுகள் குறைந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.74.30க்கும், அத்துடன் ஒரு கிலோ வெள்ளி ரூ.74300க்கும் விற்பனையாகிறது.

Tags :