Advertisement

2-வது நாளாக குறைந்தது தங்கத்தின் விலை

By: vaithegi Wed, 09 Aug 2023 11:47:15 AM

2-வது நாளாக குறைந்தது தங்கத்தின் விலை

சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.44,240க்கு விற்பனை ... சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப நாளுக்கு நாள் ஏற்ற இறக்கங்களுடன் விற்பனையாகி வரும் தங்கம் விலை நேற்று சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து.

இதனை அடுத்து 1 சவரன் 44,320 ரூபாய்க்கும், கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து 1 கிராம் தங்கம் 5,540 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையும் சற்று குறைந்து 1 கிராம் வெள்ளி 77.30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

gold price,chennai,sale ,தங்கத்தின் விலை,சென்னை,விற்பனை

இதன் தொடர்ச்சியாக 2-வது நாளாக இன்றைய தினமும் தங்கம் விலை குறைந்திருக்கிறது. எனவே அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து, 1 சவரன் 44,240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோன்று கிராமுக்கு ரூ. 10 குறைந்து 1 கிராம் ஆபரண தங்கம் ரூ.5,530 க்கும் விற்கப்படுகிறது.

இதேபோன்று சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு 60 காசுகள் குறைந்து 1 கிராம் 76 ரூபாய் 70 காசுகளுக்கு விற்பனையாகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.76,700க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Tags :