Advertisement

புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை

By: vaithegi Thu, 04 May 2023 11:14:43 AM

புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை

சென்னை: தமிழகத்தில் தங்கம் விலையானது ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில், நேற்றும் இன்றும் எதிர்பாராத உச்சத்தை அடைந்து உள்ளது.

பணவீக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்க மைய வங்கி கடன் வட்டியை 0.25 சதவீதமாக அதிகரித்ததே தங்கம் விலை அதிகரிப்பிற்கு காரணம் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் கடந்த மாதம் ஏப்ரல் 14- ஆம் தேதி தங்கம் விலை ரூ.45,760 என அதிகரித்து இருந்தது.

gold,bank loan ,தங்கம் ,வங்கி கடன்

அதனை தொடர்ந்து சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 2 நாட்களில் ரூ.1,080 வரை அதிகரித்து இருக்கிறது. இன்றைய நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.44 அதிகரித்து ரூ.5,750க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதே போன்று சவரனுக்கு ரூ. 352 அதிகரித்து ரூ. 46000 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.1 அதிகரித்து ரூ.82.80க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags :
|