Advertisement

சரிவை நோக்கி வரும் தங்கம் விலை

By: vaithegi Tue, 23 May 2023 1:32:46 PM

சரிவை நோக்கி வரும் தங்கம் விலை

சென்னை: தங்கம் விலையானது கடந்த 2 நாட்களாக குறைந்து வருகிறது. இன்றைய நிலவரப்படி தங்கம் விலை 1 கிராம் ரூ.30 குறைந்து ரூ.5,645க்கு விற்பனை .... பணக்காரர்கள் முதல் சாமானிய மக்கள் வரை யாரும் தங்கம் என்றால் முதலீடு செய்ய தயங்க மாட்டார்கள்.

தங்கம் வாங்க சிறந்த நாள் இது தான் என சொல்ல முடியாது அந்த அளவிற்கு தங்கம் விலை நாளுக்கு நாள் மாறுபடுகிறது. கடந்த வாரம் உச்சம் பெற்ற தங்கம் விலை கடந்த 2 நாட்களாகவே குறைந்து கொண்டு வருகிறது.

gold,sale ,தங்கம் ,விற்பனை

அதனால் நகை வாங்க நினைப்பவர்கள் நிம்மதி அடைந்து வருகின்றனர். இந்நிலையில் இன்று தங்கம் விலை 1 கிராம் ரூ.30 குறைந்து ரூ. 5,645 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போன்று 1 சவரன் தங்கம் ரூ.240 குறைந்து ரூ. 45,160க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 24 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.6111க்கும் 1 சவரன் ரூ.48888க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் அது மட்டுமில்லாமல் வெள்ளி விலை 1 கிராம் 60 காசுகள் குறைந்து ரூ. 78க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.78000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதனால் நகை வாங்க இதுவே சிறந்த நாள் என்பதால் நகைக்கடைகளுக்கு மக்கள் படையெடுக்க தொடங்கி இருப்பது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|