Advertisement

இன்று மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை

By: vaithegi Mon, 21 Aug 2023 3:13:21 PM

இன்று மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை

சென்னை : இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.43,640-க்கு விற்பனை ...சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. கடந்த சனிக்கிழமை விலை குறைந்த நிலையில், இன்று தங்கம் விலை அதிகரித்துள்ளது.

இதையடுத்து கடந்த சனிக்கிழமை ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து 1 சவரன் 43 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து 1 கிராம் தங்கம் 5 ஆயிரத்து 450 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு 20 பைசா குறைந்து, 76.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

gold price,chennai ,தங்கம் விலை,சென்னை

இந்த நிலையில், இன்று தங்கம் விலை அதிகரித்து உள்ளது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 அதிகரித்து 1 சவரன் தங்கம் ரூ.43,640-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோன்று 1 கிராம் ஆபரண தங்கம் ரூ.5 அதிகரித்து ரூ.5,455-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் தங்கத்தை போல வெள்ளி விலையும் அதிகரித்துள்ளது. வெள்ளியின் விலை கிராமுக்கு 20 பைசா அதிகரித்து ரூ.76.70 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை அடுத்து கட்டி வெள்ளி கிலோவுக்கு 200 ரூபாய் அதிகரித்து ரூ.76,700 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tags :