- வீடு›
- வணிகம் or வர்த்தகம்›
- மீண்டும் தங்கம் விலை இன்று உயரந்துள்ளது
மீண்டும் தங்கம் விலை இன்று உயரந்துள்ளது
By: vaithegi Wed, 15 Nov 2023 12:07:34 PM
சென்னை: சென்னையில் கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து கொண்டு வருகிறது. நேற்றைய நிலவரப்படி தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.44,920க்கு விற்பனை செய்யப்பட்டது.
இதேபோன்று ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 அதிகரித்து ரூ.5,615ஆக விற்பனையானது. தங்கத்தை போல் வெள்ளி விலையும் அதிகரித்தது .
இந்த நிலையில் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து 5,645 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது . எனவே இதன் மூலம் 1 சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ. 240 உயர்ந்து 45 ஆயிரத்து 160 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
இதனை அடுத்து வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் 70 காசுகள் அதிகரித்து, 1 கிராம் வெள்ளி 77 ரூபாய் 70 காசுகளுக்கும் , 1 கிலோ வெள்ளியானது ரூபாய் 77 ஆயிரத்து 700 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.