Advertisement

தொடர்ந்து 2-வது நாளாக தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது

By: vaithegi Mon, 27 Nov 2023 11:44:37 AM

தொடர்ந்து 2-வது நாளாக தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது

சென்னை: இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் அதிகரித்து 1 சவரன் தங்கம் ரூ.46,240க்கு விற்பனை ...சென்னையில் கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வந்த நிலையில், தொடர்ந்து 2-வது நாளாக தங்கம் விலை உயர்ந்துள்ளது. கடந்த சனிக்கிழமை தங்கம் விலை உயர்ந்த நிலையில், இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது.

இதையடுத்து கடந்த சனிக்கிழமை சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்து 1 சவரன் தங்கம் ரூ.46,040க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.5,755-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி ஒரு கிராம் 80.20 ரூபாய்க்கும், 1 கிலோ வெள்ளி ரூ.80,200-க்கு விற்பனை செய்யப்பட்டது.

gold price,sale , தங்கத்தின் விலை,விற்பனை

இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து 1 சவரன் தங்கம் ரூ.46,240க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதேபோன்று 1 கிராம் ஆபரண தங்கம் 25 ரூபாய் உயர்ந்து ரூ.5,780-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தை போல வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.1.30 காசுகள் அதிகரித்து, 1 கிராம் வெள்ளி ரூ.81.50-க்கும், பார் வெள்ளி ரூ.81,500-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tags :