Advertisement

இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை

By: vaithegi Fri, 21 July 2023 11:10:51 AM

இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை

சென்னை : தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 44,560 ரூபாய்க்கு விற்பனை .. சென்னையில் கடந்த 4 நாட்களாகவே உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று குறைந்து உள்ளது. நேற்று முன் தினம் தங்கம் விலை அதிரடியாக ரூ.320 உயர்ந்து 1 சவரன் 44,720 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்தது.

எனவே அதன்படி 1 சவரன் ரூ.44,880க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோன்று கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து, 1 கிராம் ஆபரணத் தங்கம் ரூ. 5,610க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு 40 காசுகள் உயர்ந்து 1 கிராம் ரூ. 82.40க்கு விற்பனை செய்யப்பட்டது. 1 கிலோ பார் வெள்ளி 82,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

gold price,sale ,தங்கம் விலை,விற்பனை

இந்நிலையில், சென்னையில் இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாயும், கிராமுக்கு 40 ரூபாயும் குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து 1 சவரன் 44,560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் கிராமுக்கு ரூ.40 குறைந்து 1 கிராம் 5,570 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 40 காசுகள் குறைந்து 1 கிராம் வெள்ளி ரூ.82.00 ஆகவும், 1 கிலோ வெள்ளி 400 ரூபாய் குறைந்து ரூ.82,000ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Tags :