Advertisement

தங்கம் ஒரு கிராம் ரூ.5,301க்கு விற்பனை!

By: Monisha Wed, 05 Aug 2020 12:59:30 PM

தங்கம் ஒரு கிராம் ரூ.5,301க்கு விற்பனை!

தங்கம் விலை கடுமையாக உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,301க்கு விற்பனையாகிறது.

உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு செய்ய துவங்கியுள்ளனர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது.

அதன் காரணமாக தங்கம் விலையில் கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகிறன்றன. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.

gold,silver,prices,investment,sales ,தங்கம்,வெள்ளி,விலை,முதலீடு,விற்பனை

தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.792 உயர்ந்து ரூ.42,408க்கு விற்பனையாகிறது.

தங்கம் விலை கிராமிற்கு ரூ.99 உயர்ந்து ரூ.5,301க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை ஒரு கிராமிற்கு ரூ.4.60 அதிகரித்து ரூ.77.20க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை கடந்த 5 வாரங்களில் ரூ.5,528 வரை அதிகரித்துள்ளது.

Tags :
|
|
|