Advertisement

மீண்டும் உயர தொடங்கிய தங்கம்

By: vaithegi Thu, 05 Oct 2023 1:43:19 PM

மீண்டும் உயர தொடங்கிய தங்கம்

சென்னை: இன்று தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.42,360க்கு விற்பனை ..பங்குசந்தையில் ஏற்படும் ஏற்ற, இறக்கம் ஆகியவற்றை பொறுத்தே ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், பண்டிகை தினங்கள் மற்றும் வார இறுதி நாட்களில் பொதுவாகவே தங்கத்தின் விலை கணிசமாக உயருகிறது. தற்போது, அனைத்து முக்கிய பண்டிகைகளும் நிறைவடைந்துள்ள நிலையில் தங்கத்தின் விலை சற்று குறைவதும், கூடுவதுமாய் இருந்து வருகிறது.

அந்த வகையில் நேற்று முன்தினம் தங்கத்தின் விலை சவரனுக்கு 32 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம் 42,848 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் நேற்றும் ஆபரண தங்கத்தின் விலை குறைந்தது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.528 குறைந்து ரூ.42,320-க்கு விற்பனை செய்யப்பட்டது.

gold,sale ,தங்கம் ,விற்பனை


இந்த நிலையில், நீண்ட நாட்களுக்கு பின்னர் இன்று தங்கம் விலை அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் தங்கம் 42,360 ரூபாக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 10 ரூபாய் அதிகரித்து 1 கிராம் 5295 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதையடுத்து தங்கத்தை போல வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. சில்லறை வர்த்தகத்தில் 1 கிராம் வெள்ளி 40 காசுகள் அதிகரித்து -ரூ.73.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஒரு கிலோ வெள்ளி 73 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tags :
|