Advertisement

மீண்டும் அதிரடியாக அதிகரித்த தங்கம்

By: vaithegi Tue, 10 Oct 2023 11:49:00 AM

மீண்டும் அதிரடியாக அதிகரித்த தங்கம்

சென்னை: இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் 43,040 ரூபாய்க்கு விற்பனை ..சென்னையில் கடந்த சில நாட்களாகஏ தங்கம் விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து கொண்டு வருகிறது. நேற்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து 1சவரன் தங்கம் ரூ.42,920 ஆக விற்பனை செய்யப்பட்டது.

இதேபோன்று 1 கிராம் ஆபரண தங்கம் 5 ரூபாய் குறைந்து 5,365 ஆக விற்பனை செய்யப்பட்டது. ஆனால் நேற்று வெள்ளில் விலை உயர்ந்தது. வெள்ளி கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.75.50 ஆகவும், 1 கிலோ வெள்ளி ரூ.75,500 ஆக விற்பனை செய்யப்பட்டது.

gold,sale,silver ,தங்கம்,விற்பனை,வெள்ளி

இந்நிலையில், தங்கம் விலை இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் அதிகரித்து1 சவரன் தங்கம் 43,040 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் 1 கிராம் தங்கம் 15 ரூபாய் அதிகரித்து 5,380 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதனை அடுத்து வெள்ளி விலை எவ்வித மாற்றமும் இன்றி அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிராம் வெள்ளி ரூ.75.50 ஆகவும், 1 கிலோ வெள்ளி ரூ.75,500 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tags :
|
|