Advertisement

இன்று 43,000 தொட்டிருக்கிறது தங்கம்

By: vaithegi Tue, 14 Mar 2023 11:34:22 AM

இன்று 43,000 தொட்டிருக்கிறது தங்கம்

சென்னை: எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு.அந்த வகையில் இன்று தங்கம் விலை அதிகரித்துள்ளது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் ரூ.1600 உயர்வு.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் ஏற்ற, இறக்கங்கள் நிலவுகின்றன. இரண்டு வாரங்களுக்கு முன்பு குறைந்திருந்த தங்கம் விலை, கடந்த நாட்களாக மீண்டும் உயரத் தொடங்கி இருக்கிறது.

gold,jewellery ,தங்கம் ,அணிகலன்கள்

இந்தநிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ. 65 உயர்ந்து ரூ. 5,390-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.43,120 -க்கு விற்பனையாகிறது. இதனால் 41,000 - 42,000 ஆயிரத்திற்குள் இருந்து வந்த தங்கத்தின் விலை இன்று அதிரடியாக 43,000 தெட்டிருக்கிறது.

24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.46,016-க்கு விற்பனையாகிறது. இதேபோல், சென்னையில் வெள்ளியின் விலை, கிராமுக்கு ரூ.2.50 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.72.00 க்கு, விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.250 அதிகரித்து ரூ.72,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Tags :
|