Advertisement

3 வது நாளாக எவ்வித மாற்றமும் இன்றி விற்பனையாகும் தங்கம்

By: vaithegi Mon, 15 May 2023 12:48:11 PM

3 வது நாளாக எவ்வித மாற்றமும் இன்றி விற்பனையாகும் தங்கம்

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து எந்த வித மாற்றமும் இல்லை .... சர்வதேச வணிக சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை பொறுத்து தான் ஆபரணத் தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த சில வருடங்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து தற்போது 1 கிராம் ரூ.6,000 ஐ எட்டும் நிலை வந்து உள்ளது. இதனால் சாதாரண மக்கள் தங்கம் வாங்க மிகவும் சிரமம் அடைந்து கொண்டு வருகின்றனர்.

sale,price of gold ,விற்பனை,தங்கத்தின் விலை

இதனை அடுத்து, கடந்த மே 13 - ம் தேதியான சனிக்கிழமை நிர்ணயம் செய்யப்பட்ட விலையிலேயே தங்கம் நேற்றும், அதனை தொடர்ந்து இன்றும் விற்பனை செய்யப்படுகிறது.

அதாவது 22 கேரட் தங்கம் 1 கிராம் ரூ.5715 க்கும், 1 சவரன் ரூ.45720 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று, 24 கேரட் தங்கம் 1 கிராம் ரூ.6184 க்கும், 1 சவரன் ரூ.49472 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், சில்லறை விற்பனையில் வெள்ளியின் விலை 1 கிராம் ரூ.78.50க்கும், 1 கிலோ வெள்ளி ரூ.78500 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Tags :
|