Advertisement

தொடர்ந்து 2வது நாளாக அதிகரித்த தங்கம்

By: vaithegi Tue, 18 July 2023 11:17:55 AM

தொடர்ந்து 2வது நாளாக அதிகரித்த தங்கம்

சென்னை: இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 உயர்ந்து ரூ.44,400-ஆக விற்பனை .... கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து கொண்டு வருகிறது. இந்த நிலையில், தொடர்ந்து 2-வது நாளாக சென்னையில் தங்கம் விலை அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரித்து ரூ. 44,288-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதேபோல் 1 கிராம் தங்கம் ரூ.5,536-க்கு விற்பனை செய்யப்ட்டது. ஆனால் வெள்ளி விலை நேற்று குறைந்தது. வெள்ளியின் விலை 1 கிராமிற்கு 30 பைசாக்கள் குறைந்து ரூ.81.50 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.300 குறைந்து ரூ.81,500 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.

gold,sale ,தங்கம் ,விற்பனை

இந்த நிலையில், தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரித்து ரூ.44,400-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.14 அதிகரித்து ரூ.5,550ஆக விற்பனையாகிறது.

எனினும் வெள்ளி விலை தொடர்ந்து 2-வது நாளாக குறைந்துள்ளது. வெள்ளி 1 கிராமுக்கு 10 காசுகள் குறைந்து ரூ.81.40க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 1 கிலோ வெள்ளி 100 ரூபாய் குறைந்து ரூ. 81,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Tags :
|