Advertisement

தொடர்ந்து 2வது நாளாக அதிகரித்த தங்கம்

By: vaithegi Tue, 22 Aug 2023 11:03:32 AM

தொடர்ந்து 2வது நாளாக அதிகரித்த தங்கம்

சென்னை: சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.43,680-க்கு விற்பனை ..சென்னையில் கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து கொண்டு வருகிறது. கடந்த சனிக்கிழமை விலை குறைந்த நிலையில், நேற்று தங்கம் விலை அதிகரித்தது. கடந்த சனிக்கிழமை ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து 1 சவரன் 43 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதையடுத்து கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் 5 ஆயிரத்து 450 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 அதிகரித்து 1 சவரன் தங்கம் ரூ.43,640-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.5 அதிகரித்து ரூ.5,455-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளியின் விலை கிராமுக்கு 20 பைசா அதிகரித்து ரூ.76.70 ஆக விற்பனை செய்யப்பட்டது.

gold,sale ,தங்கம் ,விற்பனை


இந்நிலையில், இன்றும் தங்கம் விலை அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 அதிகரித்து 1 சவரன் தங்கம் ரூ.43,680-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 அதிகரித்து 1 கிராம் தங்கம் ரூ.5,460-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதேபோல் வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.1.30 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் 78-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 1300 ரூபாய் அதிகரித்து ரூ.78,000-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tags :
|