Advertisement

தொடர்ந்து 2வது நாளாக உயர்ந்த தங்கம்

By: vaithegi Sat, 16 Sept 2023 12:36:47 PM

தொடர்ந்து 2வது நாளாக உயர்ந்த தங்கம்

சென்னை: ஒரு சவரன் தங்கம் 44 ஆயிரத்து 240 ரூபாய்க்கு விற்பனை .....சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. நேற்று முன் தினம் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை எவ்வித மாற்றமும் இன்று ஒரே விலையில் விற்பனை செய்யப்பட்டது.

இதையடுத்து ஒரு சவரன் தங்கம் 43 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோன்று ஆபரண தங்கம் 5 ஆயிரத்து 480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று தங்கம் விலை உயர்ந்தது. சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 44 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

gold,sale ,தங்கம் ,விற்பனை


ஒரு கிராம் தங்கம் 20 ரூபாய் அதிகரித்து 5 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் வெள்ளி விலையும் அதிகரித்தது. வெள்ளி கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து 77 ரூபாய் 50 பைசாவாகவும், ஒரு கிலோ வெள்ளி 500 ரூபாய் அதிகரித்து 77 ஆயிரத்து 500 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் 44 ஆயிரத்து 240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 30 ரூபாய் அதிகரித்து 1 கிராம் தங்கம் 5530 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோன்று வெள்ளி விலையும் அதிகரித்து உள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 70 காசுகள் அதிகரித்து ரூ.78.20 ஆகவும், கிலோவுக்கு 700 ரூபாய் அதிகரித்து 78 ஆயிரத்து 200 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tags :
|