Advertisement

கடந்த 2 நாட்களாக ஏற்றம் கண்ட தங்கம் இன்று சற்று குறைவு

By: vaithegi Thu, 13 Apr 2023 11:25:45 AM

கடந்த 2 நாட்களாக ஏற்றம் கண்ட தங்கம் இன்று சற்று குறைவு

சென்னை: எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு. அந்த வகையில் சென்னையில் கடந்த 2 நாட்களாக ஏற்றம் கண்ட தங்கம் விலை இன்று சிறிதளவு குறைந்துள்ளது.

ஆனால் இன்று தங்கம் விலை வெறும் கிராமுக்கு நான்கு ரூபாய் மட்டுமே குறைந்துள்ளதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். தங்கத்தின் விலை நேற்று ஒரு கிராமுக்கு 50 ரூபாய் அதிகரித்த நிலையில் இன்று நான்கு ரூபாய் மட்டுமே அதில் குறைந்துள்ளது இன்றைய தங்கம் வெள்ளி மதிப்பு தற்போது பார்ப்போம்.

gold,chennai,jewellery ,தங்கம் ,சென்னை,அணிகலன்கள்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 4 ரூபாய் குறைந்து ரூபாய் 5676.00 என விற்பனையாகிறது. அதேபோன்று சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 32 குறைந்து ரூபாய் 45408.00 என விற்பனையாகி வருகிறது.

சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6131.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 49048.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 40 காசுகள் அதிகரித்து ரூபாய் 81.80 எனவும், 1 கிலோ விலை ரூபாய் 81800.00 எனவும் விற்பனையாகி வருகிறது

Tags :
|