Advertisement

சில நாட்களாக பெரிய வெங்காயத்தின் விலை உயர்வு .. கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை

By: vaithegi Mon, 06 Nov 2023 11:15:01 AM

சில நாட்களாக பெரிய வெங்காயத்தின் விலை உயர்வு .. கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை


சென்னை : சென்னை கோயம்பேடு சந்தையில் கடந்த சில நாட்களாகவே பெரிய வெங்காயத்தின் விலை அதிகரிக்க தொடங்கியது. மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டு வரும் நிலையில், 65 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. பெரிய வெங்காயத்தின் விலை 80 ரூபாயை தொட்டுள்ளது.

இதையடுத்து 1 கிலோ சின்ன வெங்காயம் 130 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் கிலோ 85 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. தினசரி 70 டன் விற்பனைக்கு வரும் சின்ன வெங்காயத்தின் வரத்து திடீரென்று பாதியாக குறைந்த நிலையில் விலை அதிகரித்தது. அதேபோன்று பெரிய வெங்காயத்தின் அறுவடை தொடர்ந்து தாமதமாகி வருவதால் வெங்காயத்தின் விலை 2 மடங்கு உயர்ந்து உள்ளது.

govt,big onion,sale ,அரசு ,பெரிய வெங்காயம்,விற்பனை


இந்த நிலையில் வெளிச்சந்தையில் உயர்ந்து வரும் வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் சென்னையில் உள்ள பண்ணை பசுமை கடைகளில் 1 கிலோ வெங்காயத்தை 30க்கு விற்பனை செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது.

இதையடுத்து தேவை ஏற்பட்டால் மாநிலத்தின் பிற பகுதிகளுக்கும் வெங்காயம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்து உள்ளார்.

Tags :
|