Advertisement

படிப்படியாக குறைந்த வரும் தங்கம்

By: vaithegi Tue, 31 Oct 2023 11:11:21 AM

படிப்படியாக குறைந்த வரும் தங்கம்


சென்னை: கடந்த சில நாட்களாகவே ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில், தொடர் சரிவை கண்டு வருவதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சி ..சென்னையில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த நிலையில், 2-வது நாளாக குறைந்து வருகிறது. கடந்த சனிக்கிழமை 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து 1சவரன் தங்கம் ரூ.46,160 ஆக விற்பனை செய்யப்பட்டது.

இதேபோல் ஒரு கிராக்கு 65 ரூபாய் உயர்ந்து 1 கிராம் தங்கம் ரூ.5,770க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து 1 சவரன் தங்கம் ரூ.45, 880 ஆக விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 35 ரூபாய் குறைந்து 1 கிராம் தங்கம் 5 ஆயிரத்து 735 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

gold,sale ,தங்கம்,விற்பனை

இந்நிலையில், இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. சென்னையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து 1 சவரன் தங்கம் ரூ..45,72 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோன்று கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.5,715க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தை போல வெள்ளி விலையும் குறைந்துள்ளது.

மேலும் வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் குறைந்து ரூ.78.20க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.78,200 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tags :
|