Advertisement

குருநானக் ஜெயந்தி ... இந்திய பங்கு சந்தைகளுக்கு விடுமுறை

By: vaithegi Tue, 08 Nov 2022 4:38:27 PM

குருநானக் ஜெயந்தி ...    இந்திய பங்கு சந்தைகளுக்கு விடுமுறை

இந்தியா: இந்திய பங்கு சந்தைகளுக்கு விடுமுறை .... இந்திய பங்கு சந்தை மதிப்பில் பிஎஸ்இ சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகள் அதிகரித்து வந்த நிலையில், இன்று குருநானக் ஜெயந்தி பண்டிகையை ஒட்டி இந்திய பங்கு சந்தைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இந்தியாவை பொறுத்தவரை பங்கு வர்த்தகமானது இந்திய தேசிய பங்கு சந்தை மற்றும் மும்பை பங்குச் சந்தை என்ற இரண்டினை மையமாக வைத்து தான் இயங்கி கொண்டு வருகிறது.

இதனை அடுத்து வணிக சந்தையில் ஏற்படும் ஏற்ற, இறக்கங்கள் அனைத்தும் வணிகர்களை கடுமையாக பாதிக்கும் என்பதால், தொடர்ந்து இவை கண்காணிக்கப்பட்டு வரும். இந்த நிலையில், இன்றைய காலை நேர நிலவரப்படி, பங்கு சந்தையானது நல்ல நிலையில் உள்ளது.

holiday,stock market ,விடுமுறை,பங்கு சந்தை

அதாவது, S&B BSE சென்செஸ் புள்ளியானது 0.39 சதவீதம் உயர்ந்து தற்போது 61,185.15 ஆகவும், 0.47 சதவீதம் அதிகரித்து 18,202.80 ஆகவும் இருந்தது. ஆனால், குருநானக் ஜெயந்தியை ஒட்டி இன்று பங்கு சந்தையானது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், ஈக்விட்டி மற்றும் கரன்சி சந்தைகள் புதன்கிழமை காலையிலும், கமாடிட்டி சந்தைகள் இன்று மாலை 5 மணிக்கும் தங்கள் வர்த்தக சேவைகளை மீண்டும் தொடங்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :