Advertisement

கனமழை மற்றும் பண்டிகை தினம் ..காய்கறிகளின் விலை கடுமையாக உயர்வு

By: vaithegi Thu, 19 Oct 2023 3:56:40 PM

கனமழை மற்றும் பண்டிகை தினம்  ..காய்கறிகளின் விலை கடுமையாக  உயர்வு


சென்னை: காய்கறிகளின் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது ...தமிழகத்தில் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு பெரும்பாலான தாய்மார்கள் விரதமிருந்து அம்மனுக்கு பிரார்த்தனை செய்து வருவதனால் குடும்பத்தினர் அனைவரும் சைவ உணவிற்கு மாறிவுள்ளனர். இதனால், கடந்த சில நாட்களாகவே காய்கறிகளின் விலை உச்சத்தில் இருந்து கொண்டு வருகிறது. அந்த வகையில், இன்று சென்னை கோயம்பேடு சந்தையில் ஒவ்வொரு காய்கறிகளும் என்னென்ன விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது குறித்த பற்றி பார்ப்போம்.

அந்த வகையில், அவரைகாய் கிலோ ரூ.80க்கும், நெல்லிக்காய் ரூ.89க்கும், மக்காச்சோளம் ரூ. 85 ரூபாய்க்கும், பீன்ஸ் ரூ. 80க்கும், பீட்ரூட் ரூ. 20க்கும், பாகற்காய் ரூ. 30-க்கும், கத்தரிக்காய் ரூ. 30-க்கும், முட்டைக்கோஸ் ரூ. 12க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

price of vegetables,heavy rain ,காய்கறிகளின் விலை ,கனமழை

இதனைத் தொடர்ந்து, கொத்தவரை கிலோவுக்கு ரூ. 25க்கும், பச்சை மிளகாய் ரூ.30க்கும், கருணைக்கிழங்கு ரூ.25 க்கும், பெரிய வெங்காயம் ரூ.42க்கும், சாம்பார் வெங்காயம் ரூ. 100க்கும், பீர்க்கங்காய் ரூ. 40க்கும், உருளைக்கிழங்கு ரூ.32க்கும்,

இதையடுத்து முள்ளங்கி ரூ. 70க்கும், தக்காளி ரூ. 13க்கும், வாழைப்பூ ரூ. 25க்கும், பூசணி ரூ. 20க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், பண்டிகை தினம் முடிவடையும் வரைக்கும் அடுத்தடுத்த நாட்களில் காய்கறிகளின் விலை இன்னும் உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags :