Advertisement

இன்றைய பெட்ரோல், டீசலின் விலைப்பட்டியல் இதோ

By: vaithegi Mon, 07 Aug 2023 11:46:02 AM

இன்றைய பெட்ரோல், டீசலின் விலைப்பட்டியல் இதோ

சென்னை: 439 -வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசலின் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படாமல் அதே விலையில் விற்பனை ..சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மற்றும் ஏற்றுமதி, இறக்குமதி போன்றவற்றைப் பொறுத்து உள்நாட்டில் பெட்ரோல், டீசலின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

அந்த வகையில், கடந்த 2021 -ஆம் ஆண்டில் பெட்ரோல், டீசலின் விலை திடீரென உயர்த்தப்பட்டு பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ. 110.82 ஆகவும், டீசலின் விலை லிட்டருக்கு ரூ.102.59 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. இதன் பின், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி அடிப்படையில் பெட்ரோல், டீசலின் விலை குறைக்கப்பட்டது.

petrol,diesel,sales ,பெட்ரோல்,டீசல்,விற்பனை

அதாவது, பெட்ரோல் மீதான கலால் வரி அடிப்படையில் ரூ.9 குறைந்து ரூ.102.63 ஆகவும், டீசல் மீதான கலால் வரி அடிப்படையில் லிட்டருக்கு ரூ.7.50 குறைந்து ரூ.94.24க்கு விற்பனை செய்யப்பட்ட வந்தது.

இதன் பின்னும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை 439 -வது நாளாக இன்று வரையிலும் எந்த வித மாற்றமும் செய்யப்படாமல் பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ.102.63 க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனாலும், ஓரிரு மாதங்களில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் ஒன்று வெளியாகி வருகிறது.

Tags :
|
|