Advertisement

ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் இணையத்தில் வெளியாகியது!

By: Monisha Sat, 18 July 2020 4:00:24 PM

ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் இணையத்தில் வெளியாகியது!

ஒன்பிளஸ் நிறுவனத்தின் நார்டு ஸ்மார்ட்போன் சில தினங்களில் வெளியாக உள்ள நிலையில் தற்போது ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்தியாவில் ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் முன்பதிவு செய்யப்படுகிறது. முன்னதாக, ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர், நான்கு பிரைமரி கேமராக்கள், OIS, 105 டிகிரி செல்ஃபி கேமரா என ஏற்கனவே இந்த ஸ்மார்ட்போனில் வழங்கப்பட இருக்கும் அம்சங்கள் பற்றிய விவரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டன.

அந்த வகையில் தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனில் ஃபிளூயிட் AMOLED டிஸ்ப்ளே, 90 ஹெர்ட்ஸ் ரிஃப்ரெஷ் ரேட், அதிகபட்சம் 12 ஜிபி ரேம் வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் 32 எம்பி செல்ஃபி கேமரா மற்றும் கூடுதலாக 105 டிகிரி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ் வழங்கப்படுகிறது.

oneplus nord,smartphone,highlights,amazon ,ஒன்பிளஸ் நார்டு,ஸ்மார்ட்போன்,சிறப்பம்சங்கள்,அமேசான்

இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டிருக்கும் ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போனில் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் வழங்கப்படவில்லை. இரு முன்புற கேமராக்களும் குறைந்த வெளிச்சமுள்ள பகுதிகளிலும் மிகவும் தெளிவான செல்ஃபி எடுக்க வழி செய்யும் என கூறப்படுகிறது.

பின்புறம் 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா, 5 எம்பி டெப்த் கேமரா மற்றும் மேக்ரோ சென்சார் வழங்கப்படுகிறது. இதுதவிர புதிய ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போன் 4115 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. இதன் விலை மற்றும் முழு விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

Tags :