Advertisement

ஹெச்எம்டி குளோபல் நிறுவனத்தின் 4ஜி வசதியுடைய நோக்கியா போன்கள் அறிமுகம்

By: Karunakaran Fri, 06 Nov 2020 1:53:07 PM

ஹெச்எம்டி குளோபல் நிறுவனத்தின் 4ஜி வசதியுடைய நோக்கியா போன்கள் அறிமுகம்

ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா 8000 மற்றும் நோக்கியா 6300 மாடல்களை 4ஜி வசதியுடன் விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போது இந்த இரண்டு பழைய மாடல்களும் ஸ்வீடன் நாட்டு டெலிகாம் வலைதளத்தில் இருந்து லீக் ஆகி இருக்கிறது.

இரண்டு நோக்கியா மாடல்களிலும் 4ஜி எல்டிஇ வசதி வழங்கப்படுகிறது. 2000 ஆண்டுகளில் மிகவும் பிரபலமான மாடல்களாக நோக்கியா 8000 மற்றும் நோக்கியா 6300 இருந்தன. தற்சமயம் இவை புதுப்பிக்கப்பட்டு 4ஜி வசதியுடன் மீண்டும் அறிமுகமாக இருக்கின்றன. இது பெரும் வரவேற்ப்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

hmt global,4g,nokia phones,6300 beecher phone ,எச்எம்டி குளோபல், 4 ஜி, நோக்கியா தொலைபேசிகள், 6300 பீச்சர் போன்

டெலிகாம் வலைதள விவரங்களின் படி நோக்கியா 8, நோக்கியா 9, நோக்கியா 4.2, நோக்கியா 3.2, நோக்கியா 5.3, நோக்கியா 7.2, நோக்கியா 2720 ப்ளிப், நோக்கியா 8.3, நோக்கியா 3.4, நோக்கியா 2.4 மற்றும் நோக்கியா 225 4ஜி உள்ளிட்டவை வைபை காலிங் வசதி வழங்கப்படுகிறது. நோக்கியா 8000 மற்றும் நோக்கியா 6300 போன்களில் மேம்படுத்தப்பட்ட வசதிகள் இணைக்கப்படலாம்.

சமீபத்தில் ஆப்பிள், சாம்சங், ஹூவாய், ஒன்பிளஸ், சியோமி மற்றும் இதர நிறுவன ஸ்மார்ட்போன்களிலும் வைபை காலிங் சேவை வழங்கப்படுகிறது. இதன் மூலம் பயனர்கள் வைபை காலிங் சேவையை எளிதாக பயன்படுத்த முடியும். இதுகுறித்த வெளியீட்டு அறிவிப்பு மற்றும் அதன் சிறப்பம்சங்கள் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
|