Advertisement

நீண்ட கால கடன் சலுகையை அறிவித்த ஹோண்டா கார்ஸ்!

By: Monisha Tue, 23 June 2020 6:30:13 PM

நீண்ட கால கடன் சலுகையை அறிவித்த ஹோண்டா கார்ஸ்!

இந்தியாவில் தனது வாடிக்கையாளர்களுக்கு ஹோண்டா கார்ஸ் நிறுவனம் நீண்ட கால கடன் சலுகையை அறிவித்து இருக்கிறது. இதற்கென ஹோண்டா கார்ஸ் நிறுவனம் ஆக்சிஸ் வங்கியுடன் இணைந்துள்ளது.

வாடிக்கையாளர்களின் தகுதிக்கு ஏற்ப தனித்துவம் வாய்ந்த சலுகையை தேர்வு செய்யப்பட்ட ஹோண்டா கார் மாடல்களுக்கு இந்நிறுவனம் அறிவித்து இருக்கிறது. புதிய நீண்ட கால கடன் சலுகையின் கீழ் வாடிக்கையாளர்கள் அதிகபட்சம் எட்டு ஆண்டுகளுக்கு கடன் செலுத்த முடியும்.

india,loan offer,honda,monthly installments ,இந்தியா,கடன் சலுகை,ஹோண்டா,மாத தவணை,

இத்துடன் ஒரு பகுதி கட்டணத்தை மாத தவணையில் மாற்றங்களை செய்து கொண்டு செலுத்த முடியும். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களின் மாதாந்திர நிதி தேவைக்கு ஏற்ப பணம் செலுத்த வழி வகுக்கும்.

தற்சமயம் இந்த சலுகை ஹோண்டா அமேஸ் மாடலுக்கு வழங்கப்படுகிறது. அதன்படி வாடிக்கையாளர்கள் ரூ. 10 ஆயிரம் முன்பணம் செலுத்தி புதிய காம்பேக்ட் செடான் மாடலை வாங்கிட முடியும். இதற்கான வட்டி 8.35 சதவீதம் ஆகும். இத்துடன் 100 சதவீத ஆன்-ரோடு ஃபண்டிங் மற்றும் ஒரு லட்சத்திற்கு ரூ. 1432 மாத தவணை செலுத்த முடியும்.

Tags :
|
|