Advertisement

ஹானர் மேஜிக்புக் மாடல்கள் சீன சந்தையில் அறிமுகம்!

By: Monisha Fri, 17 July 2020 5:57:10 PM

ஹானர் மேஜிக்புக் மாடல்கள் சீன சந்தையில் அறிமுகம்!

ஹூவாயின் ஹானர் மேஜிக்புக் 14, 15 மற்றும் ப்ரோ மாடல்கள் சீன சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. புதிய லேப்டாப்களில் ரைசன் 4000 சீரிஸ் சிபியுக்கள் வழங்கப்பட்டுள்ளன. மேஜிக்புக் ப்ரோ ரைசன் எடிஷன் மாடலில் டூயல் ஃபேன் மற்றும் டூயல் ஹீட் பைப் ஷார்க் ஃபின் ஃபேன் வழங்கப்பட்டுள்ளது. மேஜிக்புக் 14 மாடலில் முழுமையான மெட்டல் வடிவமைப்பு, சீ வேவ் வடிவத்தில் மிக குறைந்த எடை கொண்டிருக்கிறது. இத்துடன் கைரேகை சென்சார் பட்டன் வழங்கப்பட்டுள்ளது.

புதிய ஹானர் மேஜிக்புக் லேப்டாப் சீரிஸ் துவக்க மாடல் விலை 3999 யுவான் இந்திய மதிப்பில் ரூ. 43010 என துவங்குகிறது. டாப் எண்ட் ஹானர் மேஜிக்புக் ப்ரோ மாடல் விலை 5199 யுவான் இந்திய மதிப்பில் ரூ. 55915 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

honor,magicbook,chinese market,webcam,highlights ,ஹானர்,மேஜிக்புக்,சீன சந்தை,வெப்கேமரா,சிறப்பம்சங்கள்

ஹானர் மேஜிக்புக் 12/15/ப்ரோ சிறப்பம்சங்கள்
- 14 இன்ச் / 15.6 இன்ச் / 16.1 இன்ச் 1920x1080 பிக்சல் 16:9 டிஸ்ப்ளே
- 3.0GHz ஏஎம்டி ரைசன் 7 4800H மொபைல் பிராசஸர்
- ரேடியான் கிராஃபிக்ஸ்
- 16 ஜிபி 2666MHz DDR4 டூயல் சேனல் ரேம்
- 512 ஜிபி எஸ்எஸ்டி
- விண்டோஸ் 10
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக், கைரேகை சென்சார் பட்டன்
- பாப்-அப் வெப்கேமரா
- மேஜிக்லிண்க் 2.0
- வைபை 802.11 ac, ப்ளூடூத் 5.0
- யுஎஸ்பி டைப்-சி x 1, ஹெச்டிஎம்ஐ x 1, யுஎஸ்பி3.0 (டைப் ஏ) x 1, யுஎஸ்பி2.0 (டைப் ஏ) x 1
- மேஜிக்புக் 14 மற்றும் ப்ரோ – 56Wh பேட்டரி
- மேஜிக்புக் 15 – 42Wh பேட்டரி

Tags :
|
|