Advertisement

எத்தனை சிறப்பு அம்சங்கள்.. சாம்சங் கேலக்ஸி டேப் எஸ் 7 அறிமுகம்

By: Nagaraj Sat, 29 Aug 2020 12:00:22 PM

எத்தனை சிறப்பு அம்சங்கள்.. சாம்சங் கேலக்ஸி டேப் எஸ் 7 அறிமுகம்

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி டேப் எஸ்7 மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த கேலக்ஸி டேப் எஸ்7 மாடல் ஆகஸ்ட் 5 ஆம் தேதி கேலக்ஸி அன்பேக்டு விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

இருப்பினும் தற்போது மலேசியாவில் அறிமுகம் ஆகியுள்ளது. இந்த சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்7 குறித்த விவரங்களை பின்வருமாறு:

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ் 7 11 அங்குல எல்சிடி டிஸ்ப்ளேவினை 2560 x 1600 பிக்சல்கள் தீர்மானத்துடன் கொண்டதாக உள்ளது. மேலும் அது 274 பிபிஐ பிக்சல்கள் அடர்த்தி மற்றும் 500 நிட்ஸ் பிரைநட்ஸ் வசதியினைக் கொண்டுள்ளது.

features,samsung galaxy,tape s7,malaysia,introduction ,அம்சங்கள், சாம்சங் கேலக்ஸி, டேப் எஸ் 7, மலேசியா, அறிமுகம்

மேலும் கேலக்ஸி டேப் எஸ் 7 420 நிட்ஸ் பீக் பிரைட்னெஸ் மற்றும் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு தெளிவுத்திறனைக் கொண்டதாக உள்ளது. மேலும் பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை கேலக்ஸி டேப் எஸ் 7 பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் வசதியினைக் கொண்டுள்ளது.

கேலக்ஸி டேப் எஸ் 7 கேமராவைப் பொறுத்தவரை முன்புறத்தில் 13 மெகா பிக்சல் பிரைமரி கேமரா, 5 மெகா பிக்சல் இரண்டாவது கேமரா ஆகியவற்றையும் கொண்டுள்ளது. மேலும் இது எல்இடி பிளாஷ் வசதியினைக் கொண்டுள்ளது. மேலும் முன்புறத்தில் 8 மெகாபிக்சல் செல்பி கேமரா ஆதரவினைக் கொண்டு உள்ளது. மேலும் 10090 எம்ஏஹெச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாகவும், 45 வாட்ஸ் வரை வேகமான சார்ஜிங் வசதியினையும் கொண்டுள்ளது.

Tags :