Advertisement

5ஜி ஏலம் எடுக்க எவ்வளவு முன் தொகை கட்ட வேண்டும்?

By: Monisha Wed, 13 July 2022 8:34:16 PM

5ஜி ஏலம் எடுக்க  எவ்வளவு முன் தொகை கட்ட வேண்டும்?

அடுத்த தலைமுறைக்கான 5ஜி தொழில்நுட்பம் வர உள்ளது என்பதும் இதற்கான ஏலம் வரும் 26ஆம் தேதி நடைபெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.இந்த ஏலத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் நான்கு நிறுவனங்கள் ஏலம் கேட்க விண்ணப்பித்துள்ளன.
அம்பானி, அதானி நிறுவனங்கள் உள்பட 4 நிறுவனங்களிடம் இருந்து 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் கேட்க விண்ணப்பங்கள் வந்துள்ளன என மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இதனை அடுத்து ஜூலை 26-ஆம் தேதி நடைபெறும் ஏலத்தில் வெற்றி பெறுபவர் யார் என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்துவிட்டது. ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் ஐடியா, அதானி குழுமம் மற்றும் பாரதி ஏர்டெல் ஆகிய நான்கு நிறுவனங்கள் ஏலத்தில் பங்கேற்க உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

5g,payment,advance,network ,5ஜி ,ஏலம்,தொகை,நிறுவனம்,

ஜூலை 26ஆம் தேதி 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் நடைபெற உள்ளதாக மத்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.மேலும் இந்த ஏலத்தில் 600மெகா ஹெட்ஸ், 700 மெகாஹெட்ஸ், 800,900 மெகாஹெட்ஸ், 1800 மெகாஹெட்ஸ், 2100மெகாஹெட்ஸ், 2300மெகாஹெட்ஸ், 2500மெகாஹெட்ஸ், 3300மெகாஹெட்ஸ், 26ஜிகாஹெட்ஸ் ஆகியவை ஏலம் விடப்படஉள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி அதானி நிறுவனம் ஏலத்தில் வெற்றி பெற்றால் தொலைத்தொடர்பு சேவையில் கூடுதலாக ஒரு நிறுவனம் வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.மொத்தத்தில் ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதற்கு அதானி ஒரு முக்கிய காரணமாக உள்ளார் என கருதப்படுகிறது.

Tags :
|