Advertisement

ஹூண்டாய் நிறுவன கார் மாடல்களுக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை தள்ளுபடி!

By: Monisha Thu, 04 June 2020 6:03:20 PM

ஹூண்டாய் நிறுவன கார் மாடல்களுக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை தள்ளுபடி!

தேர்வு செய்யப்பட்ட கார் மாடல்களுக்கு ஹூண்டாய் இந்தியா நிறுவனம் சிறப்பு தள்ளுபடி, சலுகைகளை அறிவித்துள்ளது. ஹூண்டாய் நிறுவனத்தின் சான்ட்ரோ, கிராண்ட் ஐ10, கிராண்ட் ஐ10 நியோஸ், எலைட் ஐ20 மற்றும் எலான்ட்ரா போன்ற மாடல்களுக்கு தள்ளுபடி மற்றும் சலுகைகள் வழங்கப்படுகின்றன.

தேர்வு செய்யப்பட்ட ஹூண்டாய் நிறுவன கார் மாடல்களுக்கு ரூ. 25 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 1 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. குறுகிய காலகட்டத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள சலுகைகள் ஒவ்வொரு கார் மாடல் வேரியண்ட், விற்பனையகம் மற்றும் மாநிலங்களுக்கு ஏற்ப மாறுபடும் என ஹூண்டாய் தெரிவித்துள்ளது.

hyundai india,special discount,sandro,grand i10,grand i10 neos ,ஹூண்டாய் இந்தியா,சிறப்பு தள்ளுபடி,சான்ட்ரோ, கிராண்ட் ஐ10, கிராண்ட் ஐ10 நியோஸ்

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் மாடலுக்கு ரூ. 25 ஆயிரம் மதிப்பிலான சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ் மற்றும் கார்ப்பரேட் சலுகைகள் அடங்கும். ஹூண்டாய் சான்ட்ரோ மாடலுக்கு ரூ. 30 ஆயிரமும், எலைட் ஐ20 மற்றும் கிராண்ட் ஐ10 மாடல்களுக்கு முறையே ரூ. 35 ஆயிரம் மற்றும் ரூ. 60 ஆயிரம் மதிப்பிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன.

ஹூண்டாய் எலான்ட்ரா மாடலுக்கு ரூ. 1 லட்சம் மதிப்புள்ள சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஏற்கனவே குறிப்பிட்டதை போன்று, இவற்றில் தள்ளுபடி, கார்ப்பரேட் சலுகை மற்றும் எக்சேன்ஜ் போனஸ் உள்ளிட்டவை பொருந்தும்.

Tags :
|