Advertisement

நடப்பு நிதியாண்டில் ஐசிஐசிஐ வங்கிக்கு 36 சதவீதம் நிகர லாபம்

By: Nagaraj Sun, 26 July 2020 5:59:39 PM

நடப்பு நிதியாண்டில் ஐசிஐசிஐ வங்கிக்கு 36 சதவீதம் நிகர லாபம்

நிகர லாபம் அதிகரிப்பு... ஐசிஐசிஐ வங்கியின் நடப்பு நிதியாண்டில் நிகர லாபம் 36 சதவீதம் அதிகரித்துள்ளது.

தனியார் துறையை சேர்ந்த ஐசிஐசிஐ வங்கியின் நடப்பு நிதியாண்டின் நிகர லாபம் அதிகரித்துள்ளதாக பங்குச்சந்தை அநத் வங்கி தெரிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டான 2020-21 ஏப்ரல் முதல் ஜுன் வரையிலான முதல் காலாண்டில் வங்கியின் மொத்த வருவாய் ரூ.26,066 கோடியாக இருந்தது.

இந்த நிதியை முந்தைய ஆணடுடன இதே காலக்கட்டத்தில ஒப்பிடுகையில் அதிகம். வங்கியின் தனிப்பட்ட நிகர லாபம் மதிப்பீட்டு காலாண்டில் ரூ.1,908 கோடியில் இருந்து 36 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.2,599 கோடியானது.

icici bank,profit,increase,weekly loan,ratio ,ஐசிஐசிஐ வங்கி, லாபம், அதிகரிப்பு, வாராக்கடன், விகிதம்

வங்கியின் ஒட்டுமொத்த நிகர லாபம் ஏப்ரல் – ஜுன் காலாண்டில் ரூ.2,513.69 கோடியில் இருந்து 24 சதவீதம் அதிகரித்து ரூ.37,939.32 கோடியானது. வங்கியின் வாராக்கடன் விகிதம் 2020 ஜுட்ன இறுதி நிலவரப்படி 6.49 சதவீதத்தில் இருந்து 5.46 சதவதீமாக குறைந்துள்ளது.

வாராக்கடன் விகிதம் குறைந்த போதிலும் ஒதுக்கீடு ரூ.3,495.73 கோடியில் இருந்து இரண்டு மடங்கு உயர்ந்து ரூ.7,593.95 கோடியானது. ஜுன் 30ஆம் தேதி நிலவரப்படி வங்கியின் மொத்த கடன் ரூ.5,92,415 கோடியில் இருந்து 7 சதவீதம் அதிகரித்து ரூ.6,31,215 கோடியை எட்டியுள்ளது.

Tags :
|