Advertisement

இன்று தங்க நகை வாங்க போறீங்களா? அப்போ விலை நிலவரத்தை தெரிந்துகொள்ளுங்கள்

By: vaithegi Sun, 21 May 2023 2:47:36 PM

இன்று தங்க நகை வாங்க போறீங்களா? அப்போ விலை நிலவரத்தை தெரிந்துகொள்ளுங்கள்

சென்னை: இன்று விடுமுறை தினம் என்பதால் தங்கத்தின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையிலேயே 1 சவரன் ரூ.45,440க்கு விற்பனை ... இந்தியாவைப் பொறுத்தவரை தென் மாநிலங்களில் தங்கத்தின் பயன்பாடு அதிக அளவில் உள்ளது.

இதையடுத்து வீட்டு விசேஷங்கள், பண்டிகைகள் உள்ளிட்ட அனைத்து சுப நிகழ்ச்சிகளிலும் தங்க அணிகலன்கள் முக்கிய இடத்தை பிடிக்கிறது. அதே நேரம் தற்போது தங்கத்தின் மீதான முதலீடுகளும் அதிகரித்து வருகிறது.

gold jewelry,chennai , தங்க நகை ,அணிகலன்கள்

இத்தகைய காரணங்களால் அவர் என்ன தங்கத்தின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு அதிகரித்து கொண்டே வருகிறது. தற்போது ஒரு சவரன் ரூ. 45,000 தாண்டி விற்பனையாகி வருகிறது. இந்த தங்கத்தின் விலையானது தினந்தோறும் பங்கு சந்தை நிலவரத்தை பொறுத்து ஏற்ற இறக்கம் அடைந்து வருகிறது.

அந்த வகையில் இன்று விடுமுறை தினம் என்பதால் தங்கத்தின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் நேற்றைய நிலையிலேயே 1 கிராம் ரூ. 5680 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போல 1 சவரன் ஆபரணத் தங்கம் ரூ. 45,440க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் வெள்ளி 1 கிராம் ரூ. 79 ஆகவும் ஒரு கிலோ ரூ.79,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tags :