Advertisement

இன்று தங்கம் வாங்க போறிங்களா அப்போ விலை என்ன தெரிந்துகொள்ளுங்கள்

By: vaithegi Sun, 13 Aug 2023 3:49:47 PM

இன்று தங்கம் வாங்க போறிங்களா அப்போ விலை என்ன தெரிந்துகொள்ளுங்கள்

சென்னை: இன்று தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையிலேயே விற்பனை .... தமிழகத்தில் ஆடிப்பெருக்கினை தொடர்ந்து ஓரளவுக்கு தங்கத்தின் விலை குறைந்தபடியே இருந்து வந்தது. இந்த நிலையில், தற்போது வார இறுதி நாட்கள் என்பதால் தங்கத்தின் விலை சற்று உயர ஆரம்பித்திருக்கிறது.

அதாவது, நேற்று சென்னையில் 24 தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 5970க்கும், சவரனுக்கு ரூ.47,760 க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. மேலும், 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 5500 க்கும், சவரனுக்கு ரூ.44,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இதனையடுத்து, இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கத்தின் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படாமல் நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

gold,sale ,தங்கம் ,விற்பனை

அதாவது, 24 தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 5970க்கும், சவரனுக்கு ரூ.47,760க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆனால் சுதந்திர தினத்தையொட்டி தங்கத்தின் விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இது மட்டுமல்லாமல் ஆடி மாதம் முடிவடைந்த பிறகு திருமணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் வரும் என்பதனால் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயரும் என்றும் கூறப்படுகிறது.

Tags :
|